வியாழன், 30 அக்டோபர், 2014

சத்தி புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.சத்தி புத்தக திருவிழா-2014 சிறப்பாக நிறைவு பெற்றது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

சத்தி புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.


                         சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். 


           சத்தியமங்கலத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை (இன்று) ஐந்து நாட்கள் மாபெரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா தற்போதைய சூழலான முதன்முறை,நடைபெறும் இடத்தின் தூரம்,மழைக்காலம்,தீபாவளி பண்டிகை நேரம் என பல்வேறு இன்னல்களுக்கிடையிலும் சிறப்பாக நடைபெற்று இன்று இனிதே நிறைவு பெற்றது.
         இந்த விழாவிற்காக இருபது ஆயிரம் நோட்டீஸ்கள்,ஆயிரம்அழைப்பிதழ்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல் மற்றும் U.G.M.கணிப்பொறி அச்சகம் சார்பாக இரண்டாயிரம் நோட்டீஸ்கள்,ஆட்டோ விளம்பரம்,பத்திரிக்கைகளில் விளம்பரம் என செய்யப்பட்டது.
            

வியாழன், 16 அக்டோபர், 2014

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 

      தின மணி நாளிதழின் செய்தி;- 
                 விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா புதன்கிழமை துவங்கியது.
இதில், விடியல் சமூகநல இயக்கச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளைத் தலைவர் வி.வைத்தீஸ்வரன் புத்தக அரங்கைத் திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பண்ணாரி அம்மன் பள்ளிகளின் செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி துவக்கி வைக்க, அதை ஆடிட்டர் பி.மயில்சாமி பெற்றுக் கொண்டார்.
இப்புத்தகத் திருவிழா வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 25-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு தலைப்புகளில் லட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை துணைத் தலைவர் ஏ.கே.பெருமாள்சாமி, எஸ்.பி.குமாரசாமி, காமதேனு கலைக் கல்லூரித் தாளாளர் ஆர்.பெருமாள்சாமி, சாரு மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஏ.சாமியப்பன், நுகர்வோர் மற்றும் சாலைப் பாதுகாப்புச் செயலாளர் சி.பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினசரி மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.
அதன்படி, 
15-ஆம் தேதி திரு.ஸ்டாலின் குணசேகரன்,தலைவர், மக்கள் சிந்தனைப்பேரவை அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 16) பேராசிரியை புனிதா ஏகாம்பரம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. 
17-ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி,
18-ஆம் தேதி இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சென்னியப்பன், 
19-ஆம் தேதி கவிஞர் கவிதாசன் ஆகியோர் பேசுகின்றனர்.

                        சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி அரங்கினை துவக்கிவைத்த திரு.V.வைத்தீஸ்வரன் அவர்கள்,தலைவர் ,கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை, சத்தியமங்கலம்.புத்தக அரங்கினை பார்வையிட்ட காட்சி ..(காலை10.00மணி)

         
       புத்தக திருவிழா முதல் நாளன்று மாலை 6.30மணிக்கு சிறப்புரை ஆற்றிய மக்கள் சிந்தனைப்பேரவை தலைவர் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். (மாலை6.30மணி)
இரண்டாம் நாள் வழக்காடுமன்றம் 16-10-2014வியாழக்கிழமை.

            தவிர்க்க இயலாத காரணத்தால் நடுவராக கவியரசி உமா மகேஸ்வரி அவர்களும் புத்தகம் வாசிப்பதே தலைப்பில் வாதாட சத்தி மகேஸ்வரி சற்குரு அவர்களும் என மாற்றப்பட்டது.இலக்கியவாணி பேராசிரியை புனிதா ஏகாம்பரம் அவர்கள் பொதிகை தொலைக்காட்சி ஒளிப்பதிவிற்கு செல்லவேண்டிய நிலை காரணமாக இம்மாறுதல் செய்யப்பட்டது.(கவியரசி உமாமகேஸ்வரி அவர்கள் விஜய் டிவியில் வாதாடுபவர்.)

  

திங்கள், 13 அக்டோபர், 2014

அனைவரும் வாங்க! அறிவுச்செல்வத்தை அள்ளிச்செல்லுங்க!!


மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.மஞ்சள் மாநகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் சத்தியமங்கலம் வட்டத்திலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில் வருகிற அதாவது (நாளை) 15-10-2014 புதன்கிழமை முதல் 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்கள் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.நமக்குத்தேவையான புத்தகங்களை அதுவும் தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது.
        சத்தி புத்தக திருவிழாவில்  சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்,பெண் என அனைத்து வயதினரும் கொண்டாடும்விதமாக சிறுவர் நீதிக்கதைகள்,சிறுவர் படக்கதைகள்,பகுத்தறிவு,கலை,இலக்கியம்,வரலாறு,சமூகவியல்,தொழில்நுட்பங்கள்,வழிகாட்டி நூல்கள்,சுயமுன்னேற்ற நூல்கள்,தொழில் முன்னேற்ற நூல்கள்,மருத்துவ நூல்கள்,குடும்ப நலன் சார்ந்த நூல்கள்,ஆன்மீகம்,கட்டுரை,நாவல்கள்,பன்மொழி நூல்கள்,கவிதைகள்,நாடகங்கள்,என அனைத்து துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள்,பல்வேறு தலைப்புகளில் பயன்தரும் நீல்கள்,நம்ம ஊரில் நம்மைத்தேடி வந்து குவிந்துள்ளன.கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப்போல!!!!!!!!!!!!
                                வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கவும்,சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்   தினசரி மாலை 6.30மணிக்கு நம் வாழ்க்கைக்குத்தேவையான கருத்துக்களை ஆர்முடன் கேட்குபடியாக எடுத்துக்கூற புகழ்பெற்ற பேச்சாளர்கள், பிரபலங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், என சான்றோர் வருகை புரிந்து நல்ல கருத்துக்களை தர உள்ளார்கள்.சாலை பாதுகாப்பு பற்றிய கருத்தரங்குகள்,கண்களை காப்போம் ,இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் என அறிவுத்திருவிழா நிகழ்ச்சிகளாக நடக்கிறது.வாய்ப்பை பயன்படுத்தி பொழுதுபோக்காக ஒரு வாழ்க்கை வழிகாட்டி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்க!.....
.என 
அன்புடன் வரவேற்கும் 
                                      அன்பன்,

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

புன்செய்ப் புளியம்பட்டி புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.சத்தி புத்தக்கண்காட்சி வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். புன்செய்ப்புளியம்பட்டி புத்தகத்திருவிழா காட்சிகளில் சில தங்களுக்காக...

 புன்செய்ப் புளியம்பட்டி புத்தகக்கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல் விவரம்..

  திருமிகு. P.L.சுந்தரம் அவர்கள்சட்டமன்ற உறுப்பினர் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் முதல் புத்தகத்தை விற்பனை செய்து துவக்கி வைக்க.....திருமிகு.அன்பு அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி.........

 திருமிகு.லேனா தமிழ்வாணன் அவர்களது உரை
 திருமிகு.இளசை சுந்தரம் அவர்களது உரை....
  


ஞாயிறு, 5 அக்டோபர், 2014

குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை -கோபி காசிபாளையம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். 
           இன்று 5-10-2014 ஞாயிறு மாலை கோபி காசிபாளையம் சென்று ,குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை நற்பணிமன்றத்தின் உறுப்பினர்களுக்கு வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சத்தியமங்கலத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு வருகை தருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது.
       
குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக அனைவரும் வருகிற 16 ஆம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி மற்றும் வழக்காடு மன்றத்தின் நிகழ்ச்சியல் கலந்துக்கொள்ள வருவதாக உறுதியளித்தனர்.....

புதன், 1 அக்டோபர், 2014

சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி -அழைப்பிதழ்-2014



மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
           சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


                    2014அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வரை நம்ம சத்தியமங்கலத்தில் நடக்குதுங்க..இரண்டாம் நாளான 16 - 10 -2014 வியாழக்கிழமை அன்று 
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு மற்றும் அரிமா K.லோகநாதன்( LOGU DRIVING SCHOOL ) லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் அவர்களது தலைமையில் நடத்துகிறோம்.அப்போது காலை10.00மணியளவில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம்.,
                                         அல்லது 
                       ''கணினி கற்போம் வாங்க'' 
                                                                   என்னும் தலைப்பில் 
காலை 10.00மணிக்கும் + மாலை3.00மணிக்கும் 
    எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்,பெண்  அனைவருக்கும் வயது வேறுபாடின்றி 
 இணைய இணைப்புடன் கூடிய மடிக்கணினி வாயிலாக 
(1)கணினியின் பாகங்கள்,அவற்றின் பயன்பாடுகள் பற்றிய விளக்கம்,(2)தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப்பயிற்சி,
(3)ஈ மெயில் உருவாக்கும் பயிற்சி,அதன் பயன்பாடு பற்றிய விளக்கம்,(4)இணையத்தில் தேடலும்,தேவையும் பற்றிய விளக்கம்,
(5) சொந்தமாக வலைப்பதிவுகள் என்னும் வலைத்தளம் உருவாக்கி பயன்படுத்துதல் பற்றிய விளக்கம்,
(6)நகர்பேசி அதாவது மொபைலில் ஆன்டிராய்டு மென்பொருள் பயன்பாடும் அதனைப்பயன்படுத்துவது பற்றியும் 
        பயிற்சி அளிக்கப்படும்.
                 பிறகு கணினி வல்லுநர்களுக்கும் கணினி பற்றிய அடிப்படை கல்வி கற்றவர்களுக்கும் இடையே கற்றலில் மற்றும் கற்பித்தலில் குறைபாடு,சந்தேகம் பற்றிய விவாதம் நடைபெறும்.தெளிவு பெறும்வரை விளக்கம் தரப்படும்.

                          மாலை6.30மணிக்கு 
                              வழக்காடு மன்றம். 
                   திரு.A.K.பெருமாள்சாமி அவர்கள் ,
                                     துணைத்தலைவர்,
                         கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை-
                       சத்தியமங்கலம். அவர்கள் தலைமையிலும்,
       
               அரிமா.K.லோகநாதன் அவர்கள்-
                                 லோகு டிரைவிங் ஸ்கூல்-
                          சத்தியமங்கலம்அவர்களின்முன்னிலையிலும்                                                    நடைபெறுகிறது. 

                      ''இன்றைய பெண்கள் அதிகம் விரும்புவது?
 புத்தகம் வாசிப்பதையா? தொலைக்காட்சி பார்ப்பதையா? 
               
        என்ற தலைப்பில் நடைபெறும் வழக்காடுமன்றத்திற்கு,  ''இலக்கியவாணி'', பேராசிரியை. புனிதா ஏகாம்பரம், அவர்கள் நடுவராகவும்,,
  'புத்தகம் வாசிப்பதே' என்னும் தலைப்பிற்கு - 
''கவியரசி'' உமாமகேஸ்வரி அவர்களும்,,
 'தொலைக்காட்சி பார்ப்பதே' தலைப்பிற்கு -
''சொல்லரசி'' சித்ரா சுப்ரமணியம் அவர்களும் 
                       வழக்காடுகின்றனர்.
                வழக்காடு மன்றத்தின் விழா ஏற்பாடு 
லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம், 
நுகர்வோர் பாதுகாப்பு&சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
 இணைந்து செய்துள்ளன.
  
 மேலும் விவரங்களுக்கு 
(1) அரிமா.K.லோகநாதன் அவர்கள்,-தலைவர் ,
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-
உரிமையாளர்-லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் .
           நகர்பேசி எண் +91 9443021196

  (2) திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்- செயலாளர்,
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
 நகர்பேசி எண் +91 9585600733

ERODE SATHYAMANGALAM BOOK FAIR- 2014




தொடர்புக்கு 
 திரு.K.லோகநாதன் அவர்கள்,
லோகு டிரைவிங் ஸ்கூல்- # 
+91 9443021196
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
+91 9585600733
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சத்தி புத்தக கண்காட்சி நாளிதழ் செய்தி-படியுங்க.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இதோ பத்திரிக்கை செய்தி படியுங்க.........









தொடர்புக்கு, 
அரிமா.K.லோகநாதன் அவர்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்.
 மொபைல் எண் +91 9443021196 மற்றும் 
திரு.C.பரமேஸ்வரன்,
+91 9585600733
  

புதன், 17 செப்டம்பர், 2014

சத்தியமங்கலம் புத்தகம் வாசிக்கிறது.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
           சத்தியமங்கலத்தில் புத்தகம் வாசிக்கிறது நிகழ்ச்சி 


இன்று(17-09-2014புதன்கிழமை  காலை 9.30மணிக்கு)சத்தியமங்கலத்திலுள்ள ரங்கசமுத்திரம்  நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதுசமயம் நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் திரு. K.ஜோசப் சகாயராஜ் அவர்களும் தலைமையாசிரியை திருமதி.M.செல்வி அம்மையார் அவர்களும் பள்ளியின் கல்வி மேலாண்மைக்குழு தலைவர் திரு.K.லோகநாதன் அவர்களும்மற்றும் இருபள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்களும்,மாணவ,மாணவியரும் விடியல் சமூக சேவை அமைப்பின் செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளும்,  இணைந்து
 புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.





வியாழன், 4 செப்டம்பர், 2014

சத்தி புத்தக கண்காட்சி இடமாற்றம் அறிவிப்பு

                       சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

  மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம் மின்வசதி, இடவசதி,தங்குமிடம்,உட்பட பல வசதிகளை சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள  கொங்கு திருமண மண்டபம் நிர்வாகமே ஏற்றுக்கொண்டு உள்ளது.
(இதனால் செலவாகும் பெரும் தொகை மீதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.)
            புத்தக கண்காட்சி  2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு அமைப்பு மற்றும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளன.நான்காவது நாளான 18 - 10 - 2014 சனிக்கிழமை ஒருநாள் முழுவதும் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் &வாகன புகை பரிசோதனை நிலையம் மற்றும்  சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்துகின்றன.முழு விவரங்களும் விரைவில் இந்த பக்கத்தில் பகிரப்படும்.
                                என 
                          அன்பன்
                      பரமேஸ்வரன்.C
                             9585600733

புதன், 3 செப்டம்பர், 2014

உறுதிமொழி

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 
நம்ம சத்தியமங்கலத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நம்மால் இயன்றளவு உதவிகள் செய்வோம்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்! நமக்கென விளம்பரம் ஏதும் இல்லாமல் !! என்று உறுதி கூறி செயல்படுவோம்.நம்ம பகுதி மக்களை வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்போம்.  நமது மாநிலத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிகழ்ச்சி நிரல் விவரம் தங்களின் மேலான பார்வைக்காக இங்கே ..............இதுபோல செலவைக்குறைத்து அதே சமயம் நம்ம பகுதி கல்வியாளர்களும், மாணவக் குழந்தைகளும்,மகளிரும்,பொதுமக்களும்,சான்றோர்களும்,கலை ஆர்வம் மிக்கவர்களும்  பங்கேற்கும்வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்.













வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சத்தி புத்தக கண்காட்சி - 2014 கருத்துக்கேட்பு அறிவிப்பு


மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 
                       ''சத்தி புத்தக கண்காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-2014 பற்றிய நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு விரைவில் இங்கு வெளியிடப்படும்.
நிகழ்ச்சியினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக (1)கவியரங்கம்,(2)கருத்தரங்கம்,(3)உரையரங்கம்,(4)கலைநிகழ்ச்சிகள்,(5)நாட்டுப்புற கலைகள்,(6)எழுத்தாளர்&வாசகர் அரங்கம்,(7)பிரபலங்களுடன் சந்திப்பு,(8)பட்டிமன்றம்,(9)இணைய நண்பர்கள் சந்திப்பு,(10)சிறுவர்கள் விளையாட்டரங்கம்,(11)மாணவர்களுக்கான போட்டிகள்,(12)சிறுகதைப்போட்டி,(13) திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,(14)சதுரங்கப்போட்டி,(15)போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டி,(16) சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்,(17)குடும்ப உறவு மற்றும் மனித உறவு கருத்தரங்கம்,(18) ஆதரவற்றோர்,முதியோர் ,குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(19)பயணிகள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(20) தமிழில் எளிதாக இணையத்தை பயன்படுத்துவோம் தலைப்பில் விளக்கங்களுடன் விவாதம் (21) கோலப்போட்டிகள்,(22)சமையல் கலாட்டா (23) மாறுவேடப்போட்டிகள்,(24)நாடகங்கள்என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாமா ? நடத்தவேண்டும் என்றால் எப்படி நடத்துவது? என தங்களது மேலான  கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
     தங்களது கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை இந்தப்பக்கத்திலேயே பதியவும்.அல்லது  i love sathy ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கருத்துரை வழங்கவும்.
என 
அன்பன்
 பரமேஸ்வரன்.C
        

சத்தி புத்தக கண்காட்சி-நோக்கம்.

                   

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
 சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 சத்தி புத்தக கண்காட்சியின் நோக்கமே,
 அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்கள்,நூலகங்களில் அமைத்துள்ள வாசகர் வட்டங்கள்,தமிழ்ப்பண்பாட்டு மையங்கள்,செய்தியாளர்கள்,ஊடகங்கள்,அரிமா,சுழற்சங்கம்,ஜேசிஸ்,ஒய்ஸ்மென் சங்கம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், ஆசிரியர் சங்கம்,மாணவர் அமைப்புகள்,மகளிர் குழுக்கள்,அரசுத்துறைகள் அவர் தம் குடும்பங்கள் என அனைவரும் பயன்பெறும் விதமாக ......
        சமுதாய நலனுக்கான புத்தகங்கள்,நாட்டின் முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,இலக்கியம்,வரலாறு,அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதன் விளக்கங்கள்,வணிகம் சார்ந்த விசயங்கள்,வேளாண்மை சார்ந்த விவரங்கள்,மாணவர்களுக்கான முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை,சார்ந்த புத்தகங்கள்,உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு சார்ந்த புத்தகங்கள்,இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள குறிப்புகள்,வீட்டு உபயோகம் சார்ந்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்,இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்கம் வளர்க்கும் புத்தகங்கள்,குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் புத்தகங்கள், என பன்முகத் தலைப்புகளில் , தினந்தோறும் காலை 10மணி முதல் இரவு 9மணி வரை சிறப்பு விருந்தினர் உரைகள் ,சொற்பொழிவுகள்,இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்,எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள்,புத்தக மதிப்பாய்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்க நிகழ்ச்சிகள்,அறிவுத்திறனை வளர்க்கும் கட்டுரை,ஓவியம்,கதை,கவிதை,கோலம்,பட்டிமன்றம்,சதுரங்கம் போன்ற போட்டிகள் வைத்தும் சத்தி புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாகவும் பண்பாட்டுத் திருவிழாவாகவும் நடத்த வேண்டும்.நம்ம சத்தியமங்கலம்,தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதிகள்,தூக்க நாயக்கன்பாளையம்,பவானிசாகர் என சத்தி தாலூகா  வட்டார மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு  தேவைப்படும் புத்தகங்களை எளிதாக சத்தியமங்கலத்திலேயே வாங்க வாய்ப்பு அளித்து நல்ல வழிகாட்டியாக உதவிட வேண்டும். பொதுமக்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும்.அதிகப்படுத்த வேண்டும்.புத்தகங்களின் பெருமைகளை நம்ம பகுதி மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். என்பதே ஆகும்.

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா-2014


மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.
      SATHY BOOK FAIR என்னும் ''சத்தி புத்தகக் காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டம் ,சந்தன நகரம் என்றழைக்கப்படும் நம்ம சத்தியமங்கலத்தில் முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.அதன் விவரம் பின்வரும் நாட்களில் இங்கு விளக்கமாக பதிவிடப்படும்.முதல் கட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 என
 அன்பன்
 பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. 

( மற்றும் தலைவர் சத்தி செஸ் அகாடமி & தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் & சாலை பாதுகாப்பு இயக்கம்)