வியாழன், 30 ஜூலை, 2015

ஆயில் புல்லிங் என்னும் எண்ணெயில் வாய் கொப்பளிப்பு

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம். வாயில்எண்ணெயால் கொப்பளித்தால் ஏற்படும் பயன்களை இப்போது அறிந்துகொள்வோம்.

வர்மக்கலை
ஆயில் புல்லிங் (Oil Pulling) / கவளம்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.....
ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் குணமாக்கியும் இருக்கிறார்கள் .....
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர் .....
நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்.....

மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.
ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.
ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.
சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.
ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.
சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.
ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது.
ஈறு இறுகும் ஆயில்புல்லிங் :
, வெம்பிய கண்டங்கத்தரிப் பழத்தை பல இடங்களில் ஊசியால் நன்கு குத்தி நல்லெண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். இதனை பிழிந்து எண்ணெயை வடித்து, ஈறு கரைந்துள்ள இடங்களில் தடவ ஈறு இறுகும். பழத்தை இளஞ்சூட்டுடன் மென்று வாய் ஈறில் வைத்து அடக்கி வர ஈறு பலப்படும். வெம்பிய கண்டங் கத்தரிப்பழங்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யால் வாய் கொப்புளித்து வர (ஆயில் புல்லிங்) பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும்

1 கருத்து: