வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சத்தி புத்தக கண்காட்சி-நோக்கம்.

                   

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
 சத்தி புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 சத்தி புத்தக கண்காட்சியின் நோக்கமே,
 அனைத்து பள்ளிகள் ,கல்லூரிகள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்கள்,நூலகங்களில் அமைத்துள்ள வாசகர் வட்டங்கள்,தமிழ்ப்பண்பாட்டு மையங்கள்,செய்தியாளர்கள்,ஊடகங்கள்,அரிமா,சுழற்சங்கம்,ஜேசிஸ்,ஒய்ஸ்மென் சங்கம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம், ஆசிரியர் சங்கம்,மாணவர் அமைப்புகள்,மகளிர் குழுக்கள்,அரசுத்துறைகள் அவர் தம் குடும்பங்கள் என அனைவரும் பயன்பெறும் விதமாக ......
        சமுதாய நலனுக்கான புத்தகங்கள்,நாட்டின் முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,இலக்கியம்,வரலாறு,அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதன் விளக்கங்கள்,வணிகம் சார்ந்த விசயங்கள்,வேளாண்மை சார்ந்த விவரங்கள்,மாணவர்களுக்கான முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை,சார்ந்த புத்தகங்கள்,உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு சார்ந்த புத்தகங்கள்,இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள குறிப்புகள்,வீட்டு உபயோகம் சார்ந்த தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்,இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்கம் வளர்க்கும் புத்தகங்கள்,குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் புத்தகங்கள், என பன்முகத் தலைப்புகளில் , தினந்தோறும் காலை 10மணி முதல் இரவு 9மணி வரை சிறப்பு விருந்தினர் உரைகள் ,சொற்பொழிவுகள்,இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்,எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள்,புத்தக மதிப்பாய்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்க நிகழ்ச்சிகள்,அறிவுத்திறனை வளர்க்கும் கட்டுரை,ஓவியம்,கதை,கவிதை,கோலம்,பட்டிமன்றம்,சதுரங்கம் போன்ற போட்டிகள் வைத்தும் சத்தி புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாகவும் பண்பாட்டுத் திருவிழாவாகவும் நடத்த வேண்டும்.நம்ம சத்தியமங்கலம்,தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதிகள்,தூக்க நாயக்கன்பாளையம்,பவானிசாகர் என சத்தி தாலூகா  வட்டார மக்களுக்கும் பயனளிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு  தேவைப்படும் புத்தகங்களை எளிதாக சத்தியமங்கலத்திலேயே வாங்க வாய்ப்பு அளித்து நல்ல வழிகாட்டியாக உதவிட வேண்டும். பொதுமக்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும்.அதிகப்படுத்த வேண்டும்.புத்தகங்களின் பெருமைகளை நம்ம பகுதி மக்களுக்கும் புரியவைக்க வேண்டும். என்பதே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக