மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
''சத்தி புத்தக கண்காட்சி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-2014 பற்றிய நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு விரைவில் இங்கு வெளியிடப்படும்.
நிகழ்ச்சியினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக (1)கவியரங்கம்,(2)கருத்தரங்கம்,(3)உரையரங்கம்,(4)கலைநிகழ்ச்சிகள்,(5)நாட்டுப்புற கலைகள்,(6)எழுத்தாளர்&வாசகர் அரங்கம்,(7)பிரபலங்களுடன் சந்திப்பு,(8)பட்டிமன்றம்,(9)இணைய நண்பர்கள் சந்திப்பு,(10)சிறுவர்கள் விளையாட்டரங்கம்,(11)மாணவர்களுக்கான போட்டிகள்,(12)சிறுகதைப்போட்டி,(13) திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,(14)சதுரங்கப்போட்டி,(15)போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டி,(16) சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்,(17)குடும்ப உறவு மற்றும் மனித உறவு கருத்தரங்கம்,(18) ஆதரவற்றோர்,முதியோர் ,குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(19)பயணிகள் பாதுகாப்பு கருத்தரங்கம்,(20) தமிழில் எளிதாக இணையத்தை பயன்படுத்துவோம் தலைப்பில் விளக்கங்களுடன் விவாதம் (21) கோலப்போட்டிகள்,(22)சமையல் கலாட்டா (23) மாறுவேடப்போட்டிகள்,(24)நாடகங்கள்என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாமா ? நடத்தவேண்டும் என்றால் எப்படி நடத்துவது? என தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தங்களது கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை இந்தப்பக்கத்திலேயே பதியவும்.அல்லது i love sathy ஃபேஸ்புக் வலைத்தளத்தில் கருத்துரை வழங்கவும்.
என
அன்பன்
பரமேஸ்வரன்.C
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக