வியாழன், 16 அக்டோபர், 2014

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா-2014

மரியாதைக்குரியவர்களே, வணக்கம். தினமணி நாளிதழின் செய்தி... விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல் முறையாக புத்தக திருவிழா புதன்கிழமை துவங்கியது. இதில், விடியல் சமூகநல இயக்கச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளைத் தலைவர் வி.வைத்தீஸ்வரன் புத்தக அரங்கைத் திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பண்ணாரி அம்மன் பள்ளிகளின் செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி துவக்கி வைக்க, அதை ஆடிட்டர் பி.மயில்சாமி பெற்றுக் கொண்டார்.இப்புத்தகத் திருவிழா வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 25-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு தலைப்புகளில் லட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை துணைத் தலைவர் ஏ.கே.பெருமாள்சாமி, எஸ்.பி.குமாரசாமி, காமதேனு கலைக் கல்லூரித் தாளாளர் ஆர்.பெருமாள்சாமி, சாரு மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஏ.சாமியப்பன், நுகர்வோர் மற்றும் சாலைப் பாதுகாப்புச் செயலாளர் சி.பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். தினசரி மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும். அதன்படி15-ஆம் தேதி திரு.ஸ்டாலின் குணசேகரன்,தலைவர், மக்கள் சிந்தனைப்பேரவை அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.வியாழக்கிழமை (அக்டோபர் 16) பேராசிரியை புனிதா ஏகாம்பரம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது17-ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி,18-ஆம் தேதி இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சென்னியப்பன்,19-ஆம் தேதி கவிஞர் கவிதாசன் ஆகியோர் பேசுகின்றனர்.சத்தியமங்கலத்தில் புத்தக கண்காட்சி அரங்கினை துவக்கிவைத்த திரு.V.வைத்தீஸ்வரன் அவர்கள்,தலைவர் ,கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை, சத்தியமங்கலம்.புத்தக அரங்கினை பார்வையிட்ட காட்சி ..(காலை10.00மணி) புத்தக திருவிழா முதல் நாளன்று மாலை 6.30மணிக்கு சிறப்புரை ஆற்றிய மக்கள் சிந்தனைப்பேரவை தலைவர் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். (மாலை6.30மணி)இரண்டாம் நாள் வழக்காடுமன்றம் 16-10-2014வியாழக்கிழமை. தவிர்க்க இயலாத காரணத்தால் நடுவராக கவியரசி உமா மகேஸ்வரி அவர்களும் புத்தகம் வாசிப்பதே தலைப்பில் வாதாட சத்தி மகேஸ்வரி சற்குரு அவர்களும் என மாற்றப்பட்டது.இலக்கியவாணி பேராசிரியை புனிதா ஏகாம்பரம் அவர்கள் பொதிகை தொலைக்காட்சி ஒளிப்பதிவிற்கு செல்லவேண்டிய நிலை காரணமாக இம்மாறுதல் செய்யப்பட்டது.(கவியரசி உமாமகேஸ்வரி அவர்கள் விஜய் டிவியில் வாதாடுபவர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக