ஞாயிறு, 26 ஜூலை, 2015

சித்த மருத்துவக் கண்காட்சி

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். சித்த மருத்துவக் கண்காட்சி பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

                      முசிறி: முசிறியில் தமிழ்நாடு பாரம்பரிய சித்தவைத்தியர் மகா சங்கத்தின் முசிறி கிளை, தஞ்சாவூர் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம், முசிறி உலக தமிழ்ச் சங்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூலிகை சித்த மருத்துவ கண்காட்சியை நடத்தின. இரண்டு நாட்கள் நடந்த மூலிகை கண்காட்சியினை ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். சித்த வைத்தியர்கள் மாணிக்க வாசகம், ஷாஜகான், ராஜசேகர், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200க்கும் மேற்பட்ட மூலிகைகள், பத்து வகை உப்புகள், 75 வகையான மூலிகை பொடிகள், சூரணம், சித்த மருத்துவத்தை விளக்கும் பாடல்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு மூலிகைகளின் பயன்கள் குறித்து அறிந்தனர். பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு முசிறி இன்ஸ்பெக்டர் கலைராசு தலைமை வகித்தார். மாநில தலைவர் அர்ச்சுணன், செயலாளர் சிவானந்தன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தேசிய தலைவர் இமாம் அலி, பரம அய்யப்பன் சுவாமிகள், ராமமுருகேசன், பிரான்சினா மேரி ஆகியோர் சித்த மருத்துவம் குறித்து பேசினர். தஞ்சை கால்நடை அறிவியல் பல்கலை பேராசிரியர் முனைவர் புண்ணியமூர்த்தி கால்நடை வளர்ப்பு குறித்தும், கால்நடைகளை தாக்கும் நோய்க்கான மருந்து குறித்தும் பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற சித்த வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பசுமை சிகரம் அறக்கட்டளை தலைவர் யோகநாதன் விவசாயத்தில் மூலிகைகளில் பங்களிப்பு குறித்து பேசினார். விழாவில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சித்த வைத்தியர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.


நன்றி; http://www.ismga.net/press-news/archives/02-2013/2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக