சனி, 22 ஆகஸ்ட், 2015

சளித் தொல்லைக்கு மருந்து.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சளித்தொல்லையா கவலைப்படாதீங்க..
                       வேலிப்பருத்தி என்னும்   உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலைச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடியுங்க,சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை சாற்றை காபியில் கலந்து குடியுங்க தலைவலி நீங்கும்.எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்கவைத்து குடியுங்க நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை,திப்பிலி,தாளிசபத்திரி இம்மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இவற்றில் தினமும் இரண்டு கிராம் பொடியை இரண்டு வேளை வீதம் தேனில் குழைத்து சாப்பிடுங்க,சளி,தும்மல்,இருமல்,அலர்ஜி ஆகியவை காணாமல் போகும்.
 அரைக்கீரை தண்டுடன் மிளகு,மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில்  குடியுங்க சளி,இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை குணமாகும்.
ஆலமர விழுதை பொடி செய்து காலை மாலை இருவேளை சாப்பிடுங்க இருமல் குணமாகும்.
அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிடுங்க மார்புச்சளி குணமாகும்.
கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போடுங்க தொண்டை வலி குணமாகும்.
வெள்ளைப்பூண்டு பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுங்க சளித்தொல்லை நிங்கிவிடும்.
பூண்டு,சிறிது புளி,மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடுங்க..சளித்தொல்லை குணமாகும்.
மிளகாய் வற்றல்,தேங்காய்த்துருவல் இரண்டையும் ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பிறகு அவற்றுடன் தோலுரிக்காத பூண்டு,உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிடுங்க.சளித்தொல்லை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக