நம்ம வட்டார மருத்துத் தாவரங்களை அடையாளப்படுத்துவோம்..மூலிகைத் தாவரங்களை தொகுத்து சேமிப்போம்.
வியாழன், 5 மார்ச், 2015
மூலிகைத்தாவரங்கள் இந்தியாவில் 7500 வகை உள்ளன.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தாளவாடி மூலிகைகள் வளர்ப்புக் குழு சார்பாக தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தினமலர் நாளிதழின் கட்டுரை பற்றி காண்போம்.
விருதுநகர்: விருதுநகரில் நடந்த தேசிய கருத்தரங்கில், இந்தியாவில் 7 500
வகையான மூலிகை தாவரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்,ஆங்கில
மருத்துவத்தை கைவிட்டு, பலரும் ,மூலிகை வைத்தியத்திற்கு மாறியதாகவும்
கூறப்பட்டது. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில், தாவர ஆய்வியல்
துறை சார்பில், "மூலிகை தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் தற்போதைய நிலை'
பற்றிய 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது. இதை, மத்திய அரசின்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேப்டன்
சீனிவாசக மூர்த்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் சரஸ்வதி துவங்கி வைத்தார்.அவர்
பேசியதாவது:
உலக அளவில் உள்ள 46 ஆயிரம் மூலிகை தாவரங்களில், இந்தியாவில்
மட்டும் 7,500 மூலிகை தாவரங்கள் உள்ளன. இன்னும் கண்டறிய வேண்டிய மூலிகை
தாவரங்கள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு மூலிகையும், அதிக பயன்களை தரக் கூடியது.
மேற்கத்திய கலாச்சாரம் புகுந்ததால், பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒதுக்கி
விட்டோம். இதனால் மூலிகையின் பயன்பாட்டை மறந்து வருகிறோம்.
கடந்த
காலங்களில், இயற்கை சார்ந்த உணவு முறைகளை கடை பிடித்து வந்தோம்.அதில்
மூலிகைகள் கலந்திருந்ததால், உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டோம் .
கிராமம்
மற்றும் நகரங்களில்,கட்டமைப்பு வசதிகள் பெருகி வருவதால்,தாவரங்கள் மற்றும்
செடி ,கொடிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதிக விளைச்சலுக்காக விவசாயிகள்,
ரசாயன உரங்களை இடுவதால், நிலம் மலட்டு தன்மை அடைகிறது.
பயிர்களுக்கு இது
போன்ற உரம் மற்றும் மருந்து அடிப்பதால், அருகில் உள்ள மூலிகை தாவரங்களும்,
அழிந்து விடுகிறது.
தற்போது, மக்கள் மத்தியில், மூலிகைகள் பற்றிய
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், ஆங்கில மருத்துவத்தை கைவிட்டு, பலரும்
மூலிகை வைத்தியத்திற்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது.
மூலிகைகளை கண்டறிந்து
வளர்க்கவும், அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கவும்,மத்திய அரசு, ஆண்டுக்கு
500 கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறது. மூலிகை தாவரம் வளர்க்கும்
விவசாயிகளுக்கும் மானியம் வழங்குகிறது, என்றார்.
100 க்கும் மேற்பட்ட
ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக